Puduvai News

கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்: பாமக

தருமபுரி, ஜனவரி 07: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் கூடுதலாக நிவாரண தொகையை பெற்று புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

தருமபுரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தானே புயல் தாக்குதலால் பெரும்பாதிப்புக்கு உள்ளான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மீட்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும். அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1 ரேசன்கார்டுக்கு ரூ.10 ஆயிரம் முதல் கட்ட நிவாரணமாக வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய பயிர்களின் சேதத்தை கணக்கிட்டு அதற்கேற்ற வகையில் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் கூடுதலாக நிவாரண தொகையை பெற்று வழங்க வேண்டும்" என்று கூறினார்.

Jan 07, 2012
More News

Post Your Comments
Name*  
City  
Country  
Email*  
Comments*  
Security Code*
   
     
 
Comments
 
 
More Puduvai News
 
 
 
Top Stories
 
Photo Gallery
 
Videos

Trailer of 'Nanban'

Guests at chennailivenews prize distribution ceremony