|
சென்னை, ஜனவரி 27: தமிழகத்தின் புதிய அமைச்சர்களாக என்.ஆர்.சிவபதி மற்றும் முக்கூர் சுப்ரமணியன் ஆகிய இருவரும் இன்று பதவியேற்றனர்.
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக முக்கூர் சுப்ரமணியனும், பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக என்.ஆர்.சிவபதியும் பதவியேற்றுக் கொண்டனர். தமிழக ஆளுநர் ரோசய்யா அமைச்சர்களுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா உள்பட தமிழக அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
|