|
புதுதில்லி, பிப்ரவரி 22: பிறந்த நாள் பரிசாக மூன்று லட்சம் அமெரிக்க டாலர் பெற்றது தொடர்பான வழக்கில், சி.பி.ஐ. மேல்முறையீட்டு மனு குறித்து நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டு மனுவின் மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்திய நீதிபதிகள் அல்தமஸ் கபீர், சுரிந்தர் சிங் நிஜ்ஜர் கொண்ட அமர்வு, சி.பி.ஐ. மேல்முறையீட்டு மனு குறித்து நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
|